தகவல்

அரசு இணையதளங்கள்.......உங்களை போல ஒருவனை கண்டுபிடிக்க ஒரு தளம்......விமான டிக்கெட் புக் செய்ய சில தளங்கள்.....போக்குவரத்து துறை.....கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள்...இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண்கள்.....ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்யும் வழிமுறைகள்

Friday, February 8, 2013

பாஸ்போர்ட் அப்ளை செய்ய வழிமுறைகள்

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் 
https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும். 

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து 
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY) 
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து 
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[]    கண்டிப்பாக எழுதவும்
[]    தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்


அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும்.  அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்


பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு  சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.



அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.  குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... 

 மேலும்  தகவல்களுக்கு

அழகான தமிழ்பெயர்களை நட்சத்திரப்படி வைக்க உதவும் இணையதளம்


இணைய உலகில் தமிழ் பெயர்களை தேட வேண்டும் என்றால் அதற்காக பல மணி நேரம் செலவு செய்தும் சரியான பெயரை தேர்வு செய்ய முடியாமல் இருக்கும் நமக்கு உதவ ஒரு தளம் ஆயிரக்கணக்கான அழகான தமிழ்பெயர்களை கொண்டுள்ளது.
இணையதள முகவரி : http://www.peyar.in
பெயர் என்று இருக்கும் இந்ததளத்தில் அழகான தமிழ்பெயர்கள் அகர வரிசைப்படி கொடுத்துள்ளனர், எளிதாக பெயர் வைக்க உதவியாக எந்த எழுத்தில் நம் குழந்தையின் பெயர் இருக்க வேண்டும் என்று பார்த்து அந்த வரிசையில் சென்று எளிதாக தேடலாம், இத்துடன் நட்சத்திரப்படி நம் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பக்கத்திலும் 100 பெயர்கள் விதம் காட்டுகின்றனர். இப்படி நாம் பார்க்கும்  பெயர்களை எல்லாம் ” கோப்பு வடிவில் பெறுக “ என்பதை சொடுக்கி கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம். 

உடல் நலம் பற்றிய அனைத்து வீடியோக்களையும் கொடுக்கும் இணையதளம்


அடிக்கடி தலைவலி வருகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை இப்படி நமக்கு எழும் பல விதமான
காரணங்களுக்கு பதில் அளிப்பதற்காகவும் உடல் நலம் மேல் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் வீடியோவுடன் பதில் சொல்ல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : http://icyou.com
இத்தளத்திற்கு சென்று நாம் உடல் நலனில் நமக்கு எந்தப்பிரச்சினை தொடர்பாக வீடியோக்களை பார்க்க வேண்டுமோ அதை Search என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம், அடுத்து வரும் திரையில் நாம் தேடிய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து வீடியோக்களும் வரும் மருத்துவரின் பதிலில் ஆரம்பித்து நோயாளியின் நேரடி அனுபவம் வரை அனைத்தையும் தெளிவாக காட்டுகிறது. பல்லில் இரத்தம் வருகிறது என்பதில் தொடங்கி கேன்சர் வரை அனைத்துக்குமான தகவல்களும் வீடியோவுடன் கிடைக்கிறது.இதைத்தவிர உடல் நலம் பற்றிய ஒவ்வொரு  துறை சார்ந்த வீடியோக்களும் அழகாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.  மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் நம்மவர்களுக்கும் உடல் நலம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

புகைப்படத்துக்கு சேதம் இல்லாமல் அளவு குறைக்க உதவும் தளம்


புகைப்பட கலைஞர்கள் மட்டுமில்லாமல் புகைப்படம் எடுக்கும் நம்மவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும், புகைப்படத்தின் குவாலிட்டி ( Quality) குறையாமல் படத்தின் கொள்ளவு (Size) மட்டும் குறைத்து கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.jpegmini.com/main/shrink_photo
போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தின் அளவை குறைப்பதைவிட இது பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியத்தில் இத்தளத்தை சோதித்து பார்த்து வியந்துவிட்டோம்  உடனடியாக நாம் எடுத்து 4MB Size கொண்ட புகைப்படத்தை வெறும் 617 KB ஆக மாற்றியது தரத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இனி எப்படி இத்தளத்தை பயன்படுத்துவது என்று பார்ப்போம். இத்தளத்திற்கு சென்று Upload your photo என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டியது மட்டும் தான் நம் வேலை, அடுத்து வரும் திரையில் நாம் பதிவேற்றிய புகைப்படத்தின் வலது பக்கம் இருக்கும் JPEG Mini என்பதை சொடுக்கி விட்டு  புகைப்படத்திற்கு அடியில் இருக்கும் Download Photo என்பதை சொடுக்கி புகைப்படத்தை தறவிரக்கலாம்.Picasa மற்றும் Flickr இருக்கும் புகைப்படங்களை கூட நாம் எளிதாக தரம், அளவு குறையாமல் எடையை மட்டும் குறைத்து தரவிரக்கலாம். 

குழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபக சக்தியை வளர்க்கும் வீடியோக்கள் காண இணையதளம்


புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.neok12.com
இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical videos, Life Sciences , Human body , Earth & Space , Geography , Social Studies , English , Math ,  History , Games , Activities போன்ற பல்வேறு துறைகளில் எந்தத்துறை சார்ந்த வீடியோக்கள் பார்க்க வேண்டுமோ அதை சொடுக்கி அதிகப்படியான் வீடியோக்களை பார்க்கலாம்.ஓவ்வொரு வீடியோவும் குழந்தைகளுக்கு பயனுள்ள வீடியோவாகவே இருக்கிறது.ஓயாமல் படி படி என்று சொல்வதை விட இது போல் குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அறிவை புகட்டும் தளங்களை தெரியப்படுத்தினால் அவர்களின் அறிவு மேலும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்க இணையதளம்


மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்கலாம்.
இணையதள முகவரி : https://www.kareer.me
இத்தளத்திற்கு சென்று நாம்  Start Your FREE Resume Now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் தகவல்களை முழுமையாக கொடுக்க வேண்டும், இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்த பின்னர் நம் பயோடேட்டாவே புதுமையாகவும் அழகாகவும் வடிவமைத்து நாம் எதில் திறமைசாலிகள் என்பதை பயோடேட்டா வெளிப்படையாக காட்டுகிறது. இத்துடன் நாம் நம்மைப்பற்றிய ஒரு அறிமுகத்தையும் என்னவெல்லாம் திறமை இருக்கிறது என்பதை வெப்காமிரா உதவியுடன் பதிவு செய்தும் அனுப்பலாம். நம் பயோடேட்டாவை பார்ப்பவர்கள் நம் வீடியோவையும் பார்ப்பதுடன் அவர்கள் நம் பயோடேட்டாவைப்பற்றி என்ன கருத்து சொல்கின்றனர் என்பதை பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது அத்துடன் நாம் உருவாக்கிய பயோடேட்டாவை எளிதில் யாருடனும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளும் வேலையில்லாத நம் நண்பர்களும் இது போல் ஒரு அழகான பயோடேட்டா உருவாக்கி எளிதில் பெரிய வேலையை பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Saturday, February 2, 2013

மொழி கற்பிக்கும் இணையதளம்


மொழி பயிற்றுவிப்பு தளங்களில் புதிய சேவையாக அறிமுகமாகியிருக்கும் வெர்ப்லிங்கை பயன்ப‌டுத்த முற்படும் போது இப்படி தான் ஏக்கத்தோடு பாடத்தோன்றும்.அதாவது உலக மொழிகளை கற்றுக்கொள்ள உதவும் நோக்கத்தோடு உதய‌மாகியுள்ள இணையதளமான வெர்ப்லிங்க் போலவே இந்திய மொழிகளை கற்று கொள்ள கைகொடுக்க கூடிய இணையதளம் உருவாக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கத்தோன்றும்.
புதிய மொழியை கற்று கொள்ள விரும்பினால் அதற்கு உதவக்கூடிய இணையதளங்கள் பல இருக்கவே செய்கின்றன.வலைப்பின்னல் தன்மையோடு மேம்ப்பட்ட பயிற்றுவிப்பு சேவைகளை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன.
எனவே மொழி கற்பதற்கான இணையதளங்களை புதுமையானது என்று சொல்வதற்கில்லை.இருப்பினும் வெர்ப்லிங்கை மொழி கற்பிக்கும் தளங்களில் புதுமையானது என்று சொல்லலாம்.புதுமையானது மட்டும் அல்ல எளிமையாது.
முதல் விஷயம் வெர்ப்லிங் வீடியோ வழியே புதிய மொழியை கற்க‌ வைக்கிற‌து. வீடியோ வழியே என்றதும் யாரோ எப்போதோ நடத்திய பாடத்தின் வீடியோ தொகுப்பாக இருக்கும் என்று நினைத்து விடக்கூடாது.இது நம‌க்காகவே நடத்தபடும் உயிரோட்டமான உடனடி பாடம்.
சொல்லப்போனால் இதனை பாடம் என்று கூட சொல்ல முடியாது.பயிற்சி என்று சொல்லலாம்.உரையாடல் மூலமான உடனடி பயிற்சி.
அதாவது எந்த மொழியை கற்க‌ விரும்புகிறோமோ அந்த மொழி பேசுபவருடன் வீடியோ வழியெ உரையாடலில் ஈடுபட்டு அந்த மொழியின் பேச்சு வழக்கு போன்ற நுணுக்கங்களை நேரடியாக கற்று கொள்ள வைப்பதே வெர்ப்லிங்கின் தனித்தனமையாக இருக்கிறது.
ஆம்,வெர்ப்லிங் புதிய மொழியை கற்று கொள்ள நினைப்பவரை அந்த மொழி பேசுபவரோடு பேசி அந்த உரையாடல் வழியே மொழியை கற்றுக்கொள்ள வழி செய்கிற‌து.
உதாரணமாக பிரெஞ்சு மொழியை கற்று கொள்ள விரும்பினால் இந்த தளம் வழியே பிரெஞ்சு மொழி பேசுபவரோடு உரையாடிப்பார்த்து அந்த மொழியை கற்கலாம்.
அட,சுவார்ஸ்ய‌மான வழியாக் இருக்கிறதே என்று நினைக்கலாம்.உண்மை தான்.இது சுவாரஸ்யமான வழி மட்டும் அல்ல;நடைமுறையில் பயன் மிக்கது.
யோசித்து பாருங்கள்,புதிய மொழியை கற்று கொள்ள எத்தனையோ வழிகள் இருந்தாலும் அந்த மொழி பேசுபவரோடு உரையாடுவது போன்ற சிறந்த வழி வேறு எதுவும் இல்லை தானே!
புத்தகங்களை பார்த்தோ அல்லது மொழி வகுப்புகளுக்கு சென்றோ கற்று கொண்டாலும் புதிய மொழியில் வார்த்தைகள்,அர்த்தங்கள்,இலக்கணம் போன்றவை அத்துபடியாகுமே தவிர அந்த மொழியில் சரளமாக பேச திண்டாடவேண்டியிருக்கும்.அந்த மொழி பேசுபவரோடு பேசும் போது தான் அதில் உள்ள வார்த்தைகளின் பயன்பாட்டை அறிய முடியும்.
அதே நேரத்தில் மொழி தெரியாத ஒரு ஊருக்கு மாற்றலாகி சென்றால் எந்த வகுபிலும் சேரமால்,புத்தகத்தை படிக்காமல் அங்குள்ளவர்களோடு உரையாடுவதன் மூலமே தட்டுத்தடுமாறி புதிய மொழியை கற்று கொண்டுவிடலாம்.
நீச்சம் கற்று கொள்ள வேண்டும் என்றால் தண்ணீரில் குதிப்பதே சிறந்த‌ வழி என்பது போல புதிய மொழி கற்க அந்த மொழிகாரர்களிடம் பேசி பழகுவதை தவிர வேறு சிறந்த வழியில்லை.ஆனால் நாம் கற்று கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்களை தேடிச்செல்வது எப்படி?
இந்த இடத்தில் தான் வெர்ப்லிங் வருகிற‌து.
வெர்ப்லிங் வேற்று மொழி பேசுபவரோடு அந்த மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிற‌வர்களை சேர்த்து வைக்கிற‌து.இருவரும் வீடியோ வழியே உரையாடிக்கொள்ளலாம்.
புதிய மொழி கற்று கொள்ள விரும்புகிற‌வர்கள் இந்த‌ தளத்தில் உறுப்பினரானதும் ,அவர் கற்க விரும்பும் மொழி பேசும் நபரோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிறது.அவரோடு பேசிப்பழக துவங்க வேண்டியது தான்.உச்சரிப்பும்,வார்த்தைகளுக்கான அர்த்தம்,பயன்பாடு போன்ற விஷயங்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அப்படியே நாள‌டைவில் அந்த மொழியில் பேசும் திறன் பெறுவிடலாம்.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வெர்ப்லிங் சரியாக பொருத்தம் பார்த்தே சேர்த்து வைக்கிறது என்பதே.அதாவது ஒரு மொழி பேசுபவரை அதனை கற்று கொள்ள விரும்புகிற‌வர்களோடே சேர்த்து வைக்கிற‌து.எப்படி என்றால் ஒருவர் ஸ்பானிய மொழி கற்க விரும்புவதாக வைத்து கொள்வோம்.அவர் சொந்த மொழி ஆங்கிலமாக‌ இருக்கிறது.அப்போது ஆங்கிலம் ஓரளவு அறிந்த ஸ்பானிஷ் மொழி பேசுபவருடன் தொடர்பை ஏற்படுத்தி த‌ருகிற‌து.
மறுமுனையில் இருப்பவருக்கு ஆங்கிலம் ஒரளவு தெரியும் என்பதால் ஸ்பானிஷ் மொழியில் உரையாடலை எளிதாக துவக்கலாம்.அதே நேரத்தில் அந்த ஸ்பானிஷ்காரரும் தன்னுடைய ஆங்கில மொழி அறிவை இவரோடு பேசி பட்டை தீட்டி கொள்ளலாம்.
ஆக கிப் அன்டு டேக் பாலிசியை போல இருவருமே ஒருஇவருக்கு மறொருவர் தங்கள் மொழியில் பேச கற்று கொடுத்து உதவலாம்.அதற்கேற்பவே வீடியோ உரையாடல் வசதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் பாதியில் இந்த மொழியில் உரையாடினால் அடுத்த பாதியில் அந்த மொழியில் உரையாட வேண்டும்.ஒரு முறை உரையாடிய பின் திருப்தி இருந்தால் மீண்டும் அவரோடே உரையாடலாம்.இப்படி படிப்படியாக‌ பேசி மொழி கற்கலாம். கற்பவர்களின் தன்மைக்கேற்ப உறுப்பினர்களின் மொழி அறிவு மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அந்த அந்த நிலையில் இருப்பவ‌ர்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்ளலாம்.
புதிய மொழி கற்க அருமையான வழி என்றாலும் இப்போதைக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நினைத்த நேரத்தில் இந்த தளத்தை பயன்படுத்த முடியாது.ஒவ்வொரு நாளும் வகுப்பு போல குறிப்பிட்ட நேரத்திற்கே உரையாடும் வசதி இருக்கிறது.முதலிலேயே பதிவு செய்து கொண்டு அந்த குறிப்பிட்ட நேரத்தில் உரையாடி கொள்ள‌லாம்.
இந்த தளம் பிரபலமாகி உறுப்பினர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தால் இன்னும் சரளமாக பயன்ப‌டுத்தி கொள்ளலாம்.
இதே போல இந்திய மொழிகளுக்காக என்றே ஒரு தளம் துவக்கப்பட்டால் எப்படி இருக்கும்?இந்தியாவில் தான் எத்தனை மொழி பேசுபவர்கள் உள்ளனர்.இந்திய வெர்ப்லிங் மூலம் நாமும் பிற இந்திய மொழிகளை கற்று கொள்ளலாம் அல்லவா?
இ8ணையதள முகவரி;http://verbling.com/