வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்!
அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.
நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன.இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ,குணா பட கமல் பாட்டு போல கொஞ்சம் மானே தேனே போட்டு கொள்ளுங்கள் என்று எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.
பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்களையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
நிற்க இந்த பதிவு நல்ல பயோடட்டாவை உருவாக்குவது எப்படி என்று வழிகாட்டுவடதற்கானது அல்ல;அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான ரெஸ்யும் பேக்கிங்கை அறிமுகம் செய்வதற்கானது.
பக்காவான ,செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் தருகிறது.அதையும் சுலபமாக,உடனடியாக செய்து தருகிறது.
இந்த தளத்திற்கு வந்த பின் ஒரு நல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை.அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம் ,கல்வி தகுதி,பணி அனுபவம் போன்ற விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிறது.பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்றன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம்.துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான்.அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்றன.
பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி தருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம்.இது முதல் படி தான்.இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ளலாம்.இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
பயோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும்.பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது.
வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்பதில் சந்தேகமில்லை.
இணையதள முகவரி;http://www.resumebaking.com/
diamond meaning - TI: titanium meaning
ReplyDeleteThe meaning of diamond meaning in this example is that the diamond is also known as a diamond. The titanium wallet name of the titanium razor diamond columbia titanium jacket is often nano titanium babyliss pro synonymous titanium 170 welder with the diamond.