குறுக்கெழுத்து புதிர்கள் ஆங்கில நாளிதழ்களில் பிரிக்க முடியாத ஒரு அங்கம்.தினசரி நாளிதழ் கையில் கிடைத்ததும் குறுக்கெழுத்து புதிர்களை விடுவிக்கும் செயலில் ஆர்வத்தோடு இறங்கி விடுபவர்களும் கனிசமாக இருக்கின்றனர்.
இத்தகைய குறுக்கெழுத்து பிரியர்கள் தினமும் நாளிதழ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றில்லை;அவர்கள் விரும்பும் நேரத்தில் குறுக்கெழுத்து புதிர்களை விளையாடலாம்.ஆன்லைன் கிராஸ்வேர்ட்ஸ் நெட் இணையதளம் இதற்கான வாய்ப்பை தருகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச குறுக்கெழுத்து புதிர்களின் இருப்பிடமாக இந்த தளம் விளங்குகிறது.அதோடு தினமும் புதுப்புது குறுக்கெழுத்துபுதிர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.எனவே குறுக்கெழுத்து பிரியர்கள் இந்த தளத்தில் எப்போது வேண்டுமானாலும் குறுக்கெழுத்து புதிர் விளையாட்டில் ஈடுபடலாம்.
பேனாவும் கையுமாக குறுக்கெழுத்து புதிர்களை விடுவித்து பழகியவர்கள் தங்களுக்கு தேவையான புதிரை தேர்வு செய்து அச்சிட்டு கொள்ளும் வசதியும் இருக்கிறது.விரும்பிய வடிவமைப்பில் அச்சிட்டு கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
அது மட்டுமா ஆர்வத்தோடு விடுவித்து கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட ஒரு வார்த்தை பிடி கொடுக்காமால் போக்கு காட்டி கொண்டிருந்தால் அதற்கு விடை காண்பதற்கான வழிகாட்டி பகுதியும் இதில் உள்ளது.ஏற்கனவே விடுவிக்கப்பட்ட புதிர்களின் விடை பட்டியலையும் பார்த்து தெளிவு பெறலாம்.
வலைப்பதிவாளர்கள் இந்த புதிர்களை தங்கள் பக்கத்திலும் இடம் பெற வைத்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
குறுக்கெழுத்து பிரியர்களுக்கு சரியான விருந்து இந்த தளம்.எல்லாம் சரி ஆங்கில தெரிந்த்வர்களுக்கு தானே இது தமிழில் இதே போல குறுக்கெழுத்து தளங்கள் இல்லையா என்று கேட்கலாம்.
தமிழ் குறுக்கெழுத்து புதிர்களை தரும் தளங்களும் இருக்கின்றன.இவற்றில் அட்டகாசமாக இருப்பது தமிழ் பசில்ஸ் டாட் காம்.கொஞ்சு தமிழ் கொஞ்சம் விளையாட என அழைப்பு விடுக்கும் இந்த தளம் குறுக்கெழுத்து புதிர்களை பட்டியல் போடுவதோடு புதிர் பூங்கா,சொல்லாங்குழி என வேறு பல விளையாட்டு பகுதிகளையும் வழங்குகிறது.எல்லாமே தமிழ் மொழி சார்ந்த விளையாட்டுக்கள்.
சொலாங்குழி விளயாட்டு உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கிறது.சொல்லும் என அழைக்கப்படும் நினைத்திருக்கும் வார்த்தையை கண்டு பிடிக்கும் விளையாட்டு இது.
இதே போல குறள் வளையில் களைத்து போடப்பட்டிருக்கும் திருக்குறளில் இருந்து சரியான குரளை கண்டு பிடிக்க வேண்டும்.இதற்கான குறிப்புகளும் சுவாரஸ்ய்மாகவே இருக்கின்றன.ஒரு குறளுக்கான குறிப்பில் திமுகவை சொல்லவில்லை சூதாடும் மன்னனை சொல்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர பிற குறுக்கெழுத்து புதிர் தளங்களுக்கான இணைப்பு பட்டியலும் இருக்கிறது.இவற்றில் ஒன்று புதிர்மயம் டாட் காம்.குறுக்கெழுத்து புதிர்களை விளையாடுவதோடு அவற்றை உருவாக்கி கொள்ளவும் வாய்ப்பு தருகிறது.
புதிர்மயத்துக்கான அறிமுக பகுதியில் தமிழ் குறுக்கெழுத்து புதிர்களின் தென்றல் இதழ் வாஞ்சிநாதன் முன்னோடி என்பதை அறிய முடிகிறது.இந்த புதிர்களை தொடர்ந்து விடுவித்த ஊக்கத்தில் எஸ் பார்த்தசாரதி என்பவர் குறுக்கெழுத்து புதிர்களுக்கான தளத்தை அமைத்திருக்கிறார்.
பொதுவாகவே இக்கால தலைமுறையினர் மத்தியில் தமிழில் படிப்பத்தற்கான ஆர்வம் குறைந்து வரும் நிலையில் இத்தகைய தளங்கள் தமிழ் மீதான ஆர்வத்தை வளர்த்தெடுக்க உதவும் என நம்பலாம்.
இணையதள முகவரி;
Thanks for sharing this info. Here is one more:
ReplyDeletemuththuvin puthirkaL: http://muthuputhir.blogspot.com/
Puzzles, Word puzzles Tamil; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்; சொல்கலை; கலைமொழி; ஆனா-ஆவன்னா சுடோகு; நவசுடோகு; கணிதப் புதிர்கள்; தர்க்கப் புதிர்கள் (Logical Puzzles), புதிர், விளையாட்டு/புதிர், பொழுதுபோக்கு; தமிழ் சொல் வழக்கு, பழமொழி, புதிய விளக்கம், சொல்லாடல், இரட்டுற மொழிதல்